Saturday, December 28, 2013

கோபன் கவிகள்

சிப்பி

அலையோடு விளையாடி அருமுத்தொன்றை சுமந்த
சிப்பி காத்திருக்கிறது அருகோரம்.....பேரலைகளின் எழுச்சியின்
முன்னரான சிப்பியின் வாழ்வும் சிறப்பானது....அன்பான அலைக்காதலனின்
அரவணைப்பிலே காதல் இனித்தது...முத்தொன்று விளைந்தது மணியாக
சிப்பியின் கருவறையிலே....கடல் படு திரவியங்களை காவு கொண்ட
கயவர்களை காவு கொள்ள “சுனாமி” தினமும் வந்தது...அலைக்காதலன்
சமுத்திரப் படையிலே தளபதியானான்....இலக்கு வென்று இடைவழியில்
இயமனின் இருப்பிடம் சென்றான்...பேரலைகளின் சமராடலின் பின்னே
சில திட்டுகள் மாயமான....பாயமான முத்தின் முகவரியோ திட்டானது...
அபலையாகி அருகோரம் சேர்ந்தது....முத்தை சுமப்பவள் என சிந்தை
தெளிந்தும் சித்தம் பிடித்த கடற்பாசிகள் சிப்பியையும் இரையாக்க
முந்தின முந்தாநாளும்...சிப்பியோ மணலில் தனை மறைத்து
கோரைகளின் ஆதரவிலே...நாளை முத்தொன்று பிறக்கும்...
மீண்டும் அது தாங்கும் சிப்பியை...முத்தின் ஒளியிலே

சிறக்கும் காத்திருக்கும் இந்த சிப்பியின் வாழ்வு....                        


Friday, December 27, 2013

கோபன் கவிதைகள் : கோபன் கவிகள்

கோபன் கவிதைகள் : கோபன் கவிகள்: நாணம் அதிகாலை பனி வேனில் வந்து நதியோர நாணல்களை யாசகம் ஒன்று கேட்கும் காதலாகி கசிந்துருக...... பனி வாடை மூடி நாணத்துடன் நாணல் தலை கு...

கோபன் கவிகள்

நாணம்

அதிகாலை பனி வேனில் வந்து நதியோர நாணல்களை
யாசகம் ஒன்று கேட்கும் காதலாகி கசிந்துருக......
பனி வாடை மூடி நாணத்துடன் நாணல் தலை குனியும்
புல் வெளி பெற்றோரை நினைத்து......
எதிர்பார்த்த வேனில் விலகியே சென்றிடும் சிறு துளிகளை
வயல் வெளிகளிலும் தும்பை பூக்களிலும் சிந்தி....
வேனில் விலக கதிரவன் எழுகிறான்....பனிப் போர்வைகள்
விலகுகின்றன...அத்தனை நாணல்களும் கதிரவனை கண்ணுக்குள்
வைக்க புல்வெளி கோகுலமானது....நாளிகைகள் நகரும்.....
கடிமணம் புரிய கதிரவன் கனியவில்லை....மாலை வரை
காதல் பேசி நிலவை கரம் பற்ற பரதேசம் செல்கிறான்....
நாணல்களின் நாணங்கள் கூட நாகரிகமாகி போனதா?
நாணங்கள் நல்ல பொழுதுகளில் பேசா விடின் வாழ்வு

கூட கானலாகிடுமா...             


கோபன் கவிதைகள் : விழாக்கள் விற்பனைக்கு பண்டிகைகளையும்விழாக்களையும்...

கோபன் கவிதைகள் : விழாக்கள் விற்பனைக்கு
பண்டிகைகளையும்விழாக்களையும்...
: விழாக்கள் விற்பனைக்கு பண்டிகைகளையும் விழாக்களையும் சந்தையில் விற்று விடலாம் போலிருக்கிறது....தேடு செல்வம் வாழ்க்கையை தின்று விட கூட...
விழாக்கள் விற்பனைக்கு

பண்டிகைகளையும் விழாக்களையும் சந்தையில் விற்று
விடலாம் போலிருக்கிறது....தேடு செல்வம் வாழ்க்கையை
தின்று விட கூடிக் களிப்பதற்க்கும் குடும்பத்துடன் குலவுதற்கும்
உண்டான தினங்களே விழாக்கள்....குடும்ப விழாக்கள் எங்கோ
ஓர் மண்டபத்தில்...அறுசுவை உண்டிகள் இல்லை...உரம் போட்டு
வளர்த்த குக்குடங்களே உணவாய்....நல்வாழ்த்து சொல்ல வருவார்
யாருமிலர்....ஓடு திரையில் முகம் பதிய வேண்டுமென்பதே இலக்கு...
பண்டிகைகளை தனியார் அலைகள் வீட்டிற்குள் முடக்கி விட்டன...
ஆரவாரங்கள் இல்லை...கூடி விளையாடல்கள் இல்லை...அனைவருமே
அலைவரிசைகளின் அடிமையாய்...பலகாரங்கள் கூட கடைத் தெருவில்..
அம்மா அடுக்கு பானையில் அடுக்கி வைத்த பலகாரங்கள் இன்றும்
என் நினைவுகளில்...
பண்டிகைகள் அர்த்தப்பட வேண்டுமாகில் அலைவரிசைகளுக்கு மூடு விழா
நடாத்த வேண்டும் அன்று...அப்பாலும் ஆலய விழாக்களும் கடமைக்கே
என்றானது... இனி வரும் காலங்களில் கணணி இசையுடன்தான்
அம்மன் உலாவோ தெரியாது....அர்த்தமிழந்த விழாக்கள் நமக்கு
தேவையா?....வாருங்கள் சந்தையில் விற்று விடுவோம்...பின் வரும்

சந்ததிகளுக்கு கற்கால சிந்தனைகளை பரிசளிப்போம்......