Friday, December 27, 2013

விழாக்கள் விற்பனைக்கு

பண்டிகைகளையும் விழாக்களையும் சந்தையில் விற்று
விடலாம் போலிருக்கிறது....தேடு செல்வம் வாழ்க்கையை
தின்று விட கூடிக் களிப்பதற்க்கும் குடும்பத்துடன் குலவுதற்கும்
உண்டான தினங்களே விழாக்கள்....குடும்ப விழாக்கள் எங்கோ
ஓர் மண்டபத்தில்...அறுசுவை உண்டிகள் இல்லை...உரம் போட்டு
வளர்த்த குக்குடங்களே உணவாய்....நல்வாழ்த்து சொல்ல வருவார்
யாருமிலர்....ஓடு திரையில் முகம் பதிய வேண்டுமென்பதே இலக்கு...
பண்டிகைகளை தனியார் அலைகள் வீட்டிற்குள் முடக்கி விட்டன...
ஆரவாரங்கள் இல்லை...கூடி விளையாடல்கள் இல்லை...அனைவருமே
அலைவரிசைகளின் அடிமையாய்...பலகாரங்கள் கூட கடைத் தெருவில்..
அம்மா அடுக்கு பானையில் அடுக்கி வைத்த பலகாரங்கள் இன்றும்
என் நினைவுகளில்...
பண்டிகைகள் அர்த்தப்பட வேண்டுமாகில் அலைவரிசைகளுக்கு மூடு விழா
நடாத்த வேண்டும் அன்று...அப்பாலும் ஆலய விழாக்களும் கடமைக்கே
என்றானது... இனி வரும் காலங்களில் கணணி இசையுடன்தான்
அம்மன் உலாவோ தெரியாது....அர்த்தமிழந்த விழாக்கள் நமக்கு
தேவையா?....வாருங்கள் சந்தையில் விற்று விடுவோம்...பின் வரும்

சந்ததிகளுக்கு கற்கால சிந்தனைகளை பரிசளிப்போம்......    

1 comment: