நாணம்
அதிகாலை பனி வேனில்
வந்து நதியோர நாணல்களை
யாசகம் ஒன்று
கேட்கும் காதலாகி கசிந்துருக......
பனி வாடை மூடி
நாணத்துடன் நாணல் தலை குனியும்
புல் வெளி பெற்றோரை
நினைத்து......
எதிர்பார்த்த வேனில்
விலகியே சென்றிடும் சிறு துளிகளை
வயல் வெளிகளிலும்
தும்பை பூக்களிலும் சிந்தி....
வேனில் விலக கதிரவன்
எழுகிறான்....பனிப் போர்வைகள்
விலகுகின்றன...அத்தனை
நாணல்களும் கதிரவனை கண்ணுக்குள்
வைக்க புல்வெளி கோகுலமானது....நாளிகைகள்
நகரும்.....
கடிமணம் புரிய
கதிரவன் கனியவில்லை....மாலை வரை
காதல் பேசி நிலவை கரம்
பற்ற பரதேசம் செல்கிறான்....
நாணல்களின் நாணங்கள்
கூட நாகரிகமாகி போனதா?
நாணங்கள் நல்ல
பொழுதுகளில் பேசா விடின் வாழ்வு
கூட கானலாகிடுமா...


No comments:
Post a Comment