சிப்பி
அலையோடு விளையாடி
அருமுத்தொன்றை சுமந்த
சிப்பி
காத்திருக்கிறது அருகோரம்.....பேரலைகளின் எழுச்சியின்
முன்னரான சிப்பியின்
வாழ்வும் சிறப்பானது....அன்பான அலைக்காதலனின்
அரவணைப்பிலே காதல்
இனித்தது...முத்தொன்று விளைந்தது மணியாக
சிப்பியின்
கருவறையிலே....கடல் படு திரவியங்களை காவு கொண்ட
கயவர்களை காவு கொள்ள “சுனாமி”
தினமும் வந்தது...அலைக்காதலன்
சமுத்திரப் படையிலே
தளபதியானான்....இலக்கு வென்று இடைவழியில்
இயமனின் இருப்பிடம்
சென்றான்...பேரலைகளின் சமராடலின் பின்னே
சில திட்டுகள் மாயமான....பாயமான
முத்தின் முகவரியோ திட்டானது...
அபலையாகி அருகோரம்
சேர்ந்தது....முத்தை சுமப்பவள் என சிந்தை
தெளிந்தும் சித்தம்
பிடித்த கடற்பாசிகள் சிப்பியையும் இரையாக்க
முந்தின
முந்தாநாளும்...சிப்பியோ மணலில் தனை மறைத்து
கோரைகளின் ஆதரவிலே...நாளை
முத்தொன்று பிறக்கும்...
மீண்டும் அது
தாங்கும் சிப்பியை...முத்தின் ஒளியிலே
சிறக்கும்
காத்திருக்கும் இந்த சிப்பியின் வாழ்வு....


